Connect with us

    உலக அளவில் ‘வாரிசு’ படத்தின் 5 நாள் வசூல் இத்தனை கோடிகளா? வியக்க வைக்கும் தகவல்..!

    Varisu

    Cinema

    உலக அளவில் ‘வாரிசு’ படத்தின் 5 நாள் வசூல் இத்தனை கோடிகளா? வியக்க வைக்கும் தகவல்..!

    தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியானது.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    Varisu

    தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

    வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார்.

    மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார்.

    சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, நேற்று நடைபெற்ற சக்சஸ் பார்ட்டியில் விஜய்யிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கேட்டேன், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். எனக்கு இதுபோதும் என உற்சாகமாக பேசினார்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!