Tamil News
ஃப்ரண்ட் மனைவியுடன் நிர்வாண வீடியோ கால்” -சினிமா பாணியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!
நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணிதரன்.
இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது30).
இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு விவகாரத்து கேட்டு பின்பு சமாதானமாகி குடும்பம் நடத்தி வந்தனர்.
பரணிதரன் தற்போது அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பரணிதரனின் நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் நெருங்கிய நட்பு காரணமாக தேர்தல் நேரத்தில் உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரணிதரனின் மனைவி ஜெயலட்சுமியுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நட்பு எல்லை மீறி தகாத நட்பாக மாறி மொபைல் போன்களில் அந்தரங்க வீடியோக்களை பகிர்வதும், வீடியோ கால்களில் அடிக்கடி பேசுவதுமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் பரணிதரன், ஜெயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று 3 பேரும் ஆபாச படங்களை அனுப்பி உள்ளனர்.
இதை தட்டிக் கேட்டதால் ஜெயலட்சுமி கோபித்துக் கொண்டு நெகனூர் பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து பரணிதரன், தனது நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகிய இருவர் மீதும் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
