Connect with us

    மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்ட செய்தியாளர்; வெட்கத்தில் சிரித்த நயன்தாரா..!!

    Vikki nayan

    Cinema

    மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்ட செய்தியாளர்; வெட்கத்தில் சிரித்த நயன்தாரா..!!

    Vikki nayan

    தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

    இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ்  சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்

    இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில் நேற்று முன்தினம் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.

    இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்

    கேரளாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு செண்டமேளத்திற்காக வரவழைக்கப்பட்டனர்.

    மும்பையிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

    திருமண மண்டபத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை.

    QR கோடு ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாரூக்கான் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

    நேற்று முன்தினம் திருமணம் முடிந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்

    அங்கு செருப்பு காலுடன் நடக்க தடை செய்யப்பட்ட பகுதியில் செருப்புடன் நடந்து சென்று போட்டோஷூட் நடத்தியதால் சர்ச்சை வெடித்தது.

    இதையடுத்து இன்று காலை மன்னிப்பு கோரி கடிதம் அளித்து இருந்தார் விக்னேஷ்.

    இந்த நிலையில் தற்போது இருவரும் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அவர்களிடம் ஹனிமூன் எங்கே போகுறீர்கள் என்று கேட்க வெட்கப்பட்டு இருவரும் சிரித்தனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!