Tamil News
கர்ப்பிணி பெண்ணின் சாபம் !! இன்றுவரை யார் வீட்டிலும் தோசையே சுடாத கிராம மக்கள் !! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம் !! எந்த ஊரில் தெரியுமா ??😲😲👇👇
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பண்டிதப்பட்டு, சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமளி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தோசை சுட்டு சாப்பிடுவதில்லை.
மேலும் எண்ணெய் பலகாரங்களான வடை, முறுக்கு, மீன், சிக்கன் உள்ளிட்ட எதையுமே வீடுகளில் செய்வதில்லை.
அவ்வாறு எண்ணெய் பலகாரங்கள் சமைத்து சமைத்து சாப்பிடுபவர் குடும்பத்தினர் இறந்து போய்விடுவார்கள் என நம்புகின்றனர் அந்த கிராம மக்கள்.
இதற்கெல்லாம் காரணம் ஒரு கர்ப்பிணி பெண்ணின் சாபம் தான் இது என சொல்லப்படுகிறது.
இக்கிராமத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த குடும்பத்தில் ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் பிள்ளையும் ஒரு குடும்பத்தினருக்கு பிறந்ததாக கூறப்படுகிறது.
ஒரே ஒரு சகோதரி என்பதால், அவர் மீது ஐந்து சகோதரர்களும் பாசமாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து, அவரின் திருமணத்திற்கு பின்னர், சுகப்பிரசவத்திற்கு மீண்டும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அந்த பெண்.
தாய் இல்லை என்பதால், சகோதர்கள் மற்றும் அவர்களின் மனைவி தான் சகோதரியை பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, சகோதரர்களின் மனைவிகள், கர்ப்பிணி பெண்ணுக்கு எதுவும் கொடுக்காமல், அவர்களே வகை வகையாக எண்ணெயில் பலகாரம் மற்றும் உணவு வகைகளை தயாரித்து சமைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையில் அந்த கர்ப்பிணி பெண் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சகோதரி இறந்த காரணம் தெரியாமலே இருந்த சகோதரர்களின் கனவில், அய்யனார் வந்து, தங்கையின் இறப்புக்கு உங்களின் மனைவிகள் தான் காரணம் என்று கூறி உள்ளார்.
மேலும் அந்த கர்ப்பிணி பெண் உயிரிழக்கும் போது, தான் பிறந்த வம்சத்தில் யாரும் இனி எண்ணெய் பலகாரங்கள் செய்யக் கூடாது என்றும் மீறி செய்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து விடுவார்கள் என்றும் சாபம் போட்டதாக அய்யனார் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர் தான், அந்த ஊரில் உள்ளவர்கள் எண்ணெய் பலகாரங்கள் செய்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், உயிரிழந்த அந்த கர்ப்பிணி பெண்ணை தெய்வமாகவே கருதி, முன்னோர்களும் வணங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அதே போல, இங்குள்ள கிராமங்களின் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் திருமணமாகி வேறு வீட்டுக்கு சென்ற பிறகு, அந்த வீட்டில் எண்ணெய் பொருட்கள் தயாரித்து உண்ணலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சந்தியம்மன் கோவிலுக்கு பின் உள்ள வரலாற்றினை அப்பகுதியிலுள்ள முதியோர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கூட, ஒரு குடும்பம் இதனை மீறி, எண்ணெய் பொருட்கள் செய்ததாகவும், இதன் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன.
அந்த அம்மனுக்கு கிடா வெட்டியதாக கூறிய பின்னர், கொப்புளங்கள் மறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆடி மாதத்தில், சந்தியம்மன் கோவிலுக்கு திருவிழாவும் எடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
