Uncategorized
விலை உயர்ந்த செல்போன், ரூபாய் 2 ஆயிரத்துடன் தெருவில் கிடந்த பையை எடுத்து போலீசில் ஒப்படைத்த 12 வயது சிறுவன்; குவியும் பாராட்டுக்கள்.. !!
கீழே விழுந்து கிடந்த செல்போன் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பாதுகாப்பாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவன் ஜீவாவை (Jeeva) எஸ் பி அழைத்து பாராட்டினார்.
விழுப்புரம் அமைச்சாரம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன் ஜீவா. இவர் அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் அன்று பள்ளியை முடித்து பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது இவருடைய வீட்டின் அருகே கேட்பாராற்று ஒரு பை கிடந்துள்ளது.
அந்த பையை நெருங்கி சென்று தயக்கத்துடன் திறந்து பார்த்துள்ளார். அப்பொழுது அதில் 15 ஆயிரம் மதிப்பிலான செல்போன், 2 ஆயிரம் ரொக்க பணம், 3 ஏடிஎம் கார்டுகள் இருந்ததை கண்டுள்ளார்.
உடனே அந்த ஹேண்ட் பேக்கினை பத்திரமாக எடுத்து சென்று தனது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன்பின்பு, ஜீவாவும் அவரது தந்தை உமாபதியும் சேர்ந்து இன்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் எஸ் பி ஸ்ரீநாதாவை பார்த்து ஹேண்ட் பேக்கினை ஒப்படைத்தனர்.
அதன்பின்பு, எஸ்பி அந்த ஹேண்ட் பேக்கினை வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்த்தார்.
அதில், 15,000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன், 2,000 ரூபாய் பணம், ஏ.டிஎம். கார்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த மாணவனை ஊக்குவிக்கும் விதமாக, எஸ்.பி. நேர்மையாக செயல்பட்ட மாணவனை பாராட்டி சாக்லேட், பரிசினை வழங்கினார்.
மேலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட அரசு பள்ளி மாணவனை போல் அனைத்து மாணவர்களும் செயல்பட வேண்டும் என எஸ் பி ஸ்ரீநாதா வலியுறுத்தியுள்ளார்.
