Connect with us

    மாலையிட சென்ற வினி ராமன்; விலகி சென்று விளையாட்டு காட்டிய கிளென் மேக்ஸ்வெல்; களைகட்டிய திருமணம்..!

    Vini Raman Marriage

    Sports News

    மாலையிட சென்ற வினி ராமன்; விலகி சென்று விளையாட்டு காட்டிய கிளென் மேக்ஸ்வெல்; களைகட்டிய திருமணம்..!

    பிரபல ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் இருவருக்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமண சடங்குகள் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

    Vini Raman Marriage

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல்.

    அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னராக திகழ்கிறார்.

    ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார்.

    இதையடுத்து அவரை இந்த முறை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

    இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    வினிராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

    இதையடுத்து இருவர் வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதையடுத்து கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாக (ஆஸ்திரேலிய நேரப்படி) ரிஷப லக்னத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போது தமிழ் பாரம்பரிய முறைப்படி மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமனின் இருவருக்குமான திருமண மாலை மாற்றிக்கொள்ளும் திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது.

    இதற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான திருமணம் குறித்து தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட திருமண அழைப்பிதழ் கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது மேக்ஸ்வேல்-லுக்கும் வினி ராமனுக்கும் நடத்தப்பட்ட தமிழ் பாரம்பரிய திருமண சடங்கு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

    மேக்ஸ்வெல் திருமண சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாள்களில் அவர் ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!