World News
கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் குழந்தை பெற்றெடுத்த மனைவி; எப்படி தெரியுமா? நெகிழ வைக்கும் கண்ணீர் சம்பவம்..!
இங்கிலாந்தின் Liverpool என்னும் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ். இவருக்கு வயது 37.
இவர் fork lift டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கும் லாரன் (வயது 33) என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.
கிறிஸ்க்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது.
இதனால் இருவரும் அதிர்ந்து போயினர். உடனடியாக Liverpool மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் கிறிஸ்.
2014-ம் ஆண்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்தார்.
ஆனால், மீண்டும் கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் கிறிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், கிறிஸ் எப்போது வேண்டுமானாலும் இறந்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், அடுத்த கொஞ்ச நாட்களில் படுத்த படுக்கையாகி விட்டார் கிறிஸ்.
இருந்த போதும், தனது கணவரால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என விருப்பப்பட்டு உள்ளார் லாரன்.
இதற்காக, கிறிஸ்ஸின் விந்தணுவை சேமித்து வைத்துள்ளார் லவுரன்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் கிறிஸ்.
கணவர் உயிரிழந்து சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் லாரன்.
இதற்காக தான் ஏற்கனவே சேமித்து வைத்து தனது கணவரின் விந்தணுக்கள் மூலம் IVF மூலமாக கடந்த மே மாதம் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் லாரன்.
இதுகுறித்து பேசும் லாரன், “எனது குழந்தையை பார்க்கும் போது எனது கணவரை பார்ப்பது போலவே உள்ளது.
எனது கணவரின் புகைப்படத்தை குழந்தைக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை.
ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை உணர்ந்து கொண்டே இருப்பதாக நான் நினைக்கிறேன்.
மேலும், எனது கணவருக்கு இருக்கும் M Shape தலை முடியை போலவே எனது மகனுக்கும் உள்ளது” என லாரன் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனுக்கு Seb என்ற பெயரையும் அவர் வைத்துள்ளார்.
ஆசை ஆசையாக கணவருடன் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு வந்த லவுரன், கணவன் பிரிவினால் துவண்டு போகாமல், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு அன்பிற்கு முன்னுதாரணமாக விளங்கும் லவுரனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
