Connect with us

    முதலிரவை தினமும் தள்ளிப் போட்ட மனைவி; காரணம் புரியாமல் தவித்த கணவர்; இறுதியில் தெரிய வந்த அ.திர்ச்சிகரமான உண்மை..!!

    Viral News

    முதலிரவை தினமும் தள்ளிப் போட்ட மனைவி; காரணம் புரியாமல் தவித்த கணவர்; இறுதியில் தெரிய வந்த அ.திர்ச்சிகரமான உண்மை..!!

    சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவியின் தம்பி ரங்கநாதன் (34).

    இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

    ரங்கநாதனுக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் பெண் தேடியும் சரியான வரன் அமையவில்லை.

    இந்நிலையில், திருமண புரோக்கர்கள் பிரபு, நளினி, கோமதி (49), ராகுல் (30) மற்றும் மாரியப்பன் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார்.

    அவர்கள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தென்னிலை புளியம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராதா (32) என்ற பெண்ணை பற்றி தெரிவித்து, ரங்கநாதனுக்கு திருமணம் செய்ய பேசி முடிவு செய்தனர்.

    மேலும், தங்களுக்கு புரோக்கர் கமிஷன் ரூபாய் 1 லட்சம் தர வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளனர்.

    ரங்கநாதனின் உறவினர்களும் ரூ.1 லட்சம் கொடுத்து ராதாவை ரங்கநாதனுக்கு மணமுடித்து வைத்துள்ளனர்.

    கடந்த மாதம் இவர்களது திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கு பிறகு, ரங்கநாதனிடம் சரியாக பேசாத ராதா, முதலிரவை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரங்கநாதன், இதுகுறித்து ராதாவிடம் கேட்டபோது தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இ.றந்து விட்டதாகவும், மேலும், 15 வயதில் மகன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், புரோக்கர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    திருமணத்தின் போது ரங்கநாதன் கொடுத்த ₹1 லட்சத்தில், ராதாவின் பங்காக கிடைத்த ₹15 ஆயிரத்தை சூட்கேசில் பத்திரமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதனால் அ.திர்ச்சி அடைந்த ரங்கநாதன், நங்கவள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, முதல் திருமணத்தை ம.றைத்து ரங்கநாதனை திருமணம் செய்து கொண்ட ராதா, புரோக்கர் கோமதி, ராதாவின் நண்பர் ராகுல் ஆகியோரை கை.து செய்தார்.

    மேலும், தலைமறைவாக உள்ள பிரபு, நளினி மற்றும் மாரியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!