Tamil News
“கட்டிலுக்கு கீழே யார் இருக்கா” – வெளிநாட்டில் இருந்து வீடியோ காலில் மனைவியிடம் கேட்ட கணவர்; அடுத்து நடந்த விபரீதம்..!!
வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த மனைவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி ஞானபாக்கியம்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
செந்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
கணவர் வெளிநாட்டில் உள்ளதால், அவருடன் அடிக்கடி ஞான பாக்கியம் வீடியோ காலில் தினமும் பேசி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, செந்திலுடன் வழக்கம்போல அவர் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தனது வீட்டில் யாரோ ஒருவர் மறைந்திருக்கிறார் என சந்தேகம் அடைந்து கேமராவை வீடு முழுவதும் காட்ட சொல்லியுள்ளார்.
மனைவியும் வீடு முழுக்க கேமராவை காட்டியுள்ளார்.
பின்னர், கட்டிலுக்கு கீழே கேமரா வை திருப்ப சொல்லியுள்ளார்.
இதனால் ஞானபாக்கியம் மனம் வெறுத்து போய் உள்ளார்.
இதனால் இருவருக்கும் கடையே திடீரென சண்டை வந்துள்ளது.
இந்த சண்டையில் வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த ஞான பாக்கியம் வீடியோ காலை கட் செய்துள்ளார்.
மேலும் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
மறுநாள் காலையில் தனது மனைவிக்கு செந்தில் போன் செய்துள்ளார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பயந்துபோன செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார்.
உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ஞான பாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
