Viral News
கணவர் விபத்தில் இறந்த தகவல் கேட்டதும் தனது குழந்தையை கொன்று விட்டு மனைவியும் தற்கொலை; நெஞ்சை உருக்கும் சோகம்…!!
கணவர் விபத்தில் இறந்ததால், அதிர்ச்சி அடைந்த மனைவி தன் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில்
தட்சின கன்னடா மாவட்டம், மங்களூருவில் தீயணைப்புத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் கங்காதரா கம்மாரா (வயது 36).
இவர் நேற்று இரவு மங்களூருவில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது சம்பந்தமான தகவல் மங்களூரு போலீசாருக்கு சென்றுள்ளது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கங்காதராவின் சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் கங்காதரா கம்மாராவின் விபத்தில் உயிரிழந்த தகவல் அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.
தனது கணவர் இறந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே நிலை குலைந்து போனார்.
கணவர் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததால் அவரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கணவர் இல்லாத இவ்வுலகில் வாழ விருப்பம் இல்லாத நிலையில் தன் ஆறு வயது அபிராம் என்ற மகனை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக லிங்கசூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
