Viral News
“உன் விரல் கூட என் மேல் படக்கூடாது” – கட்டிலில் செங்கல் கொண்டு சுவர் எழுப்பிய மனைவி; கதறிய கணவர்…!!
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி ஒருவர் கட்டிலில் செங்கல் கொண்டு சுவர் எழுப்பிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் சில விசித்திரமான காணொளிகள் வைரலாகி வருகின்றன.
சமுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் நமக்குள் ஏற்படுத்தும் விசித்திரமான காணொளிகளும் அதில் அடங்குகின்றன.
அந்த வகையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை இறுதியில் படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பும் நிலை வரை சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு சிலர் அறிவுரையும் கூறி வருகின்றனர்.
இந்த காட்சியில் கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டு கொள்ளாமல் சுவர் எழுப்பவதிலேயே குறியாக இருக்கின்றார்.
இந்தச் சுவரைப் பலப்படுத்துவதற்காக செங்கற்கள் மற்றும் சிமெண்டை கொண்டு அந்தப் பெண் நிஜமாகவே இந்தச் சுவரைக் கட்டி வருகிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விசயம்.
அதே நேரம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் கணவனும் தன் மனைவி இப்படி செய்வதை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சுவர் எழுப்புவதற்கு பதிலாக இருவரும் பேசி பிரச்சினையை தீர்க்கலாமே என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.
