Viral News
கம்மல், வளையல் அணிந்து, லிப்ஸ்டிக் போட்டு முதலிரவு அறைக்குள் வந்த கணவர்; கதறி அழுத இளம் மனைவி..!
முதலிரவில் கம்மல், வளையல்களுடன் பெண் போன்று தோற்றமளித்த கணவரால் பெண் அதிர்ச்சியடைந்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், சுடியா என்ற பகுதியில், வசித்து வரும் ஆண். இவருக்கு 32 வயதாகிறது.
திருமணம் முடிந்து மனைவியை புனேவுக்கு அழைத்து சென்றார்.
பிறகு திடீரென அந்த பெண், இந்தூர் மகிளா போலீசில், தன்னுடைய கணவன், மாமியார், நாத்தனார் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகார் குறித்து அந்த பெண் கூறியதாவது,
திருமணம் ஆனதுமே என் கணவர் என்னிடம் வித்தியாசமாக நடந்து கொண்டார்.
முதலிரவும் எங்களுக்கு நடக்கவில்லை. நான் நெருங்கி போனாலும், என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தார்.
சில சமயம், ரூமுககுள் சென்று கதவை தாழிட்டு கொள்வார்.
அவர் மீது சந்தேகம் வரவும், நான் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
அப்போதுதான், அந்த தனியறையில் அவரை அந்த கோலத்தில் நான் பார்த்தேன். பெண் போல அலங்கரித்து காணப்பட்டார்.
ஹேர் பேண்ட், பொட்டு, கம்மல், லிப்ஸ்டிக் போன்ற மேக்கப்புகளுடன் இருந்தார்.
இதை நான் கவனித்துவிட்டது தெரிந்ததும், கணவரும் அவரது குடும்பத்தினர் என்னை சரமாரியாக தாக்கினர்.
என்னை புனேவில் இருந்து அழைத்து வந்து இந்தூரில் விட்டு சென்றனர்.
அதனால்தான் புகார் தந்தேன்.
மேலும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம், நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அதில், குடும்ப வன்முறைக்கு நான் ஆளாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மனுவை விசாரித்த கோர்ட், இப்போது எனக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என்று என் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது.
என் கணவரைப் போலவே இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் பெண்களைப் போலவே டிரஸ் செய்து கொண்டு, மாலை நேரங்களில் ஒன்றாக சந்திப்பார்கள்.
அதுகுறித்த போட்டோவையும் கோர்ட்டில் சமர்ப்பித்தேன். அதற்கு பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
