Tamil News
பெண்கள் திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கணவர்; மனைவி எடுத்த சூப்பர் முடிவு…!!
ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை குறி வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி (26).
இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.
கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஸ்ரீதர் வைத்தீஸ்வரியை தாக்கியதுடன் தனது செல்போனையும் உடைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைத்தீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது.
மேலும் வைத்தீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஸ்ரீதர் திருமணம் செய்ததும் தெரியவந்தது.
கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்த கணவரிடம் இது குறித்து வைத்தீஸ்வரி கேட்டதும் அவரை தாக்கி தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து தற்போது வைதீஸ்வரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
