Connect with us

ரெயில் பயணத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கணவரின் வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து காப்பாற்றிய மனைவி; குவியும் பாராட்டுக்கள்…!

Wife gave cpr

Viral News

ரெயில் பயணத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கணவரின் வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து காப்பாற்றிய மனைவி; குவியும் பாராட்டுக்கள்…!

சமூக வலைத்தளங்களில் தினம் தினம் சில விசித்திரமான காணொளிகள் வைரலாகி வருகின்றன.

சமுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் நமக்குள் ஏற்படுத்தும் விசித்திரமான காணொளிகளும் அதில் அடங்குகின்றன.

சில நேரங்களில் அவ்வாறு வெளியாகும் சம்பவங்களின் காணொளிகள் நம் மனதில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 70 வயது முதியவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரது மனைவி சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார்.

Wife gave cpr

மதுரா, டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரெயிலில் கேசவன், தயா என்ற தம்பதி பயணம் செய்துள்ளனர்.

இந்த ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, அந்த பெண்ணின் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் வந்த ரெயில்வே போலீசார் ரெயிலை நிறுத்தி மதுரா ரெயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர்.

அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய போலீசார் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக அந்த பெண் தனது கணவரின் வாயோடு வாய் வைத்து சிகிச்சை அளித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய போலீசாருக்கு அந்த பெண்மணி நன்றி தெரிவித்தார்.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

 

Continue Reading
To Top
error: Content is protected !!