Tamil News
கொழுந்தனுடன் அடிக்கடி உல்லாசம் (illegal affair) அனுபவித்த மனைவி; பொறுத்து பொறுத்து பார்த்த கணவர் இறுதியில் செய்த வெறிச்செயல்..!
சென்னையில் தம்பியுடன் தவறான தொடர்பில் (illegal affair) இருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய கணவரை, போலீசார் கைது செய்தனர்
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(37).
கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு யாஸ்மின்(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து எழாததால், சந்தேகமடைந்த அவரது தாயார் பரிதாபானு அருகிலிருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த யாஸ்மினின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குடும்ப தகராறில் யாஸ்மின் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக யாஸ்மினின் கணவர் அப்துல் ரகுமான் காவல்துறையில் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், காவல்துறையினர் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே இறந்திருப்பதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் யாஸ்மினின் கணவரான அப்துல் ரகுமானைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் யாஸ்மினுக்கும், அப்துல் ரகுமான் தம்பி ஹபிப் என்பவருக்கும் நீண்ட காலமாக தகாத உறவு இருந்துள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனை தெரிந்து கொண்ட அப்துல் ரகுமான், தனது தம்பியுடனான தொடர்பை துண்டிக்குமாறு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், இதை உறவினர்கள் கண்டித்து, ஐந்து மாதங்களுக்கு முன் சமரசம் செய்துள்ளனர்
ஆனால் தொடர்ந்து யாஸ்மின் அவரது தம்பியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அப்துல் ரகுமான் யாஸ்மின் தூங்கி கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
