Viral News
விடிய விடிய கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசிய மனைவி; வெறுத்து போய் போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவர்; இறுதியில் நடந்த சோகம்..!
பீஹார் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக உறவினர்கள் கூறியிருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலத்தின் கைமுர் மாவட்டத்தில் உள்ளது மோக்ரி என்னும் கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரே தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், அவரது மனைவி தனது காதலருடன் இணைந்து தர்மேந்திராவை கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தர்மேந்திரா சமீபத்தில் பாபுவா காவல்நிலையத்திற்குச் சென்று புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் தனது மனைவி அனில் என்பவருடன் இரவு நேரத்தில் அதிக நேரம் பேசுவதாகவும், தனக்கு மனைவி வேண்டும் எனக்கூறி புகார் அளித்திருக்கிறார் தர்மேந்திரா.
இந்நிலையில், அனில் மற்றும் தர்மேந்திராவின் மனைவியை நேரில் வரவழைத்து பேசிய காவல்துறையினர் அறிவுரை கூறி, அப்பெண்ணை தர்மேந்திராவுடன் இணைந்து வாழுமாறு அனுப்பியுள்ளனர்.
இதனிடையே காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதை அடுத்து அனில், தர்மேந்திராவை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான், தர்மேந்திரா சடலமாக அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், தர்மேந்திராவின் மகனிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.
அதில், சம்பவம் நடந்த அன்று தனது அம்மாவும், அனிலும் வீட்டுக்கு வந்து தனது தந்தையை தாக்கியதாக கூறியிருக்கிறார்.
மேலும், தனது அம்மா அனிலுடன் அடிக்கடி போனில் பேசி வந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் அவர்.
இதுகுறித்து பேசிய பாபுபா காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் கவுரவ் குமார்,”பாபுவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மோக்ரி கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
உயிரிழந்தவரின் மனைவி அனிலுடன் தொடர்பு வைத்திருந்ததால், கொலை நடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்” என்றார்.
