Connect with us

    குறைபாடுள்ள கணவன், குழந்தை பெறுவதற்காக வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    Wife killed by husband

    Tamil News

    குறைபாடுள்ள கணவன், குழந்தை பெறுவதற்காக வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    திருப்பத்தூர் அருகே வேறு ஒரு நபருடன் இருந்த திருமணம் தாண்டிய உறவு காரணமாக தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Wife killed by husband

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    திருமணம் ஆகி 9 ஆண்டுகள் கழித்தும் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

    டாக்டர்கள் பரிசோதனையில் வேல்முருகனுக்கு குறைபாடு உள்ளது தெரியவந்தது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    விரக்தியடைந்த அருண்மொழி குழந்தை பெற நினைத்து அதே பகுதியை சேர்ந்த பரசுராமன், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளார்.

    இதனால் அருண்மொழி மூன்று மாதம் கர்ப்பமானார்.

    இதையறிந்த வேல்முருகன் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் யார் என கேட்டு அடித்ததால், கள்ளக்காதன் பரசுராமனுடன் அருண்மொழி கடந்த 1 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்

    இதனால் மனைவி காணவில்லை என்று குப்பம் காவல்நிலையத்தில் கணவன் வேல்முருகன் புகார் அளித்து இருந்துள்ளார்.

    மாயமான இருவரையும் கண்டு பிடித்த குப்பம் போலீசார் கள்ளகாதலனிடம் இருந்து பிரித்து அவரது தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் வீடு வந்த அருண்மொழியுடன் அவரது கணவர் வேல்முருகன் சமாதானம் செய்ய உடன் வந்து மாமியார் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கி உள்ளார்.

    இனிமேலாவது எவ்வித பிரச்சினையும் செய்யாமல் வாழ்கிறேன் வா என்று அழைத்துள்ளார்.

    ஆனால், நான் கள்ளக்காதலுடன் தான் வாழ்வேன் என அருண்மொழி கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் அருண்மொழியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியோடினார்.

    இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே அருண்மொழி இறந்தார்.

    இது குறித்து திருப்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பத்தில் பதுங்கியிருந்த வேல்முருகனை குப்பம் போலீசார் உதவியுடன் இன்று கைது செய்தனர்

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!