Connect with us

    கணவரை கொலை செய்து விட்டு தான் தப்பிக்க தனது 15 வயது மகனை போலீசில் சிக்க வைத்த தாய்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!

    Mother son

    Tamil News

    கணவரை கொலை செய்து விட்டு தான் தப்பிக்க தனது 15 வயது மகனை போலீசில் சிக்க வைத்த தாய்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!

    தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் மனைவி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Mother son

    திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஓமந்தூராரை அவரது 15 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

    இந்நிலையில் ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூரரின் தந்தை ரங்கசாமி புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்தது.

    மறு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

    அதில், பாண்டீஸ்வரி மற்றும் அவரது குடும்பமே சேர்ந்து ஓமத்தூராரை கொலை செய்தது தெரியவந்தது.

    பாண்டீஸ்வரி பெயரில் சத்திரப்பட்டி மற்றும் பழனியில் சொந்த வீடு இருந்துள்ளது. மதுவுக்கு அடிமையான அவரது கணவர் ஓமந்தூரார் அந்த இரண்டு வீடுகளையும் தனது பெயருக்கு மாற்றித்தரும்படி தினந்தோறும் பாண்டீஸ்வரியை அடித்து கொடுமை செய்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12 ம் தேதி சம்பவத்தன்று பாண்டீஸ்வரியின் உறவினர்கள் ஓமந்தூரர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

    அப்பொழுது மீண்டும் ஓமந்தூரர் தகராறு செய்ததோடு, பாண்டீஸ்வரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

    அப்போது அங்கிருந்த பாண்டீஸ்வரியின் உறவினர்களான கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருடன் பாண்டீஸ்வரி, அவரது 15 வயது மகனும் சேர்ந்து ஓமந்தூராரை சரமாரியாக கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதனால் நிலைகுலைந்த ஓமந்தூரார் அங்கேயே உயிரிழந்துள்ளார்

    தன் மகனுக்கு 15 வயதே இருப்பதால் விரைவில் அவர் விடுதலை ஆகி விடுவார் என்பதற்காக மகனின் படிப்பை கெடுத்து அவரை போலீசில் சரணடைய வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஏற்கனவே ஓமந்தூராரின் 15 வயது மகன் கிரிவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது மனைவி உறவினர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மகனின் படிப்பை கெடுத்து தாயே போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!