Connect with us

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவரை கொலை செய்து விட்டு, விபத்து போல செட்டப் செய்த மனைவி..!

    Wife killed husband

    Tamil News

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவரை கொலை செய்து விட்டு, விபத்து போல செட்டப் செய்த மனைவி..!

    Wife killed husband

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    மகேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக கோணமூலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் உதவி ஆய்வாளராகவும் கணக்காளராகவும் பணியாற்றி வந்தார்.

    கடந்த 23ம் தேதி சத்தியமங்கலம் கொடிவேரி சாலையில் சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் லோகநாதன், சாலையோர மைல் கல்லில் அடிபட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லோகநாதன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து லோகநாதனின் மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையினர் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் லோகநாதனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லோகநாதனின் பெற்றோர் தெரிவித்தனர்.

    அதனடிப்படையில் பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லோகநாதனின் மனைவி மகேஸ்வரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சடலத்தை வீசிச்சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து காவல்துறையினர்; நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    மகேஸ்வரி யூ டியூபில் பல்வேறு வீடியோக்களை. பதிவிட்டு வந்த லோகநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு லோகநாதன் சரியான வேலை இல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் மகேஷ்வரி வேலை செய்த மினரல் வாட்டர் கம்பெனிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் மேனேஜராக வேலைக்கு சேர்ந்தார்.

    பி.டெக் பெட்ரோ கெமிக்கல் படித்துள்ள கவுரிசங்கருக்கு வாட்டர் கம்பெனி உரிமையாளர் கார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளார்.

    இந்நிலையில் கணவன் சரியான வேலை இல்லாமல் இருப்பதால் குடும்பம் நடத்த சிரமமாக இருப்பதாக கவுரிசங்கரிடம் கூறி உள்ளார்.

    அதன் பின்னர் மகேஸ்வரிக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்த கவுரிசங்கர் நாள்தோறும் அவரை காரில் அழைத்துச்சென்று வீட்டில் விடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

    இதை லோகநாதனின் பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

    ஆனால் மகேஸ்வரி நாள்தோறும் கவுரிசங்கருடன் காரில் வீட்டிற்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இதில் கடந்த ஒரு வருடமாக மகேஸ்வரிக்கும் கவுரிசங்கருக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவர்களுடைய கள்ளக்காதல் லோகநாதனுக்கு தெரிய வந்ததும் மனைவியை கடந்த சில நாட்களாக கண்டித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 21 ம் தேதி கவுரிசங்கருடனான கள்ளதொடர்பை விடுமாறு லோகநாதன் மனைவியிடம் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கள்ளதொடர்பு கணவனுக்கு தெரிந்து விட்டதை மகேஷ்வரி கவுரிசங்கரிடம் கூறி உள்ளார்.

    அப்போது வேலைக்கு வரும் போது எப்படியாவது கணவனை அழைத்து வந்துவிடு என கவுரிசங்கர் கூறி உள்ளார்.

    அதைத்தொடர்ந்து கடந்த 23 ம் தேதி மகேஷ்வரி வேலைக்கு செல்லும் போது கணவனை அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

    கம்பெனிக்குள் சென்றதும் சத்தியில் கிரில் ஒர்க்ஷாப் வேலை செய்து வந்த கோணமூலை நஞ்சப்பகவுண்டன் புதூரை சேர்ந்த விக்னேஷ்வரன் தனது தம்பி விஜயுடன் என்பவருடன் மறைந்து இருந்த கவுரிசங்கர் மகேஸ்வரி கண் முன்பே கான்கிரீட் கல்லால் தாக்கி உள்ளனர்.

    இதில் அங்கேயே சுருண்டு விழுந்து லோகநாதன் உயிரிழந்தார்.

    உடனடியாக லோகநாதனின் சடலத்தையும், அவர் சென்ற பைக்கையும் மகேஷ்வரி விஜய் மற்றும் விக்னேஷ்வரனுடன் சேர்ந்து வாட்டர் கம்பெனி வேனில் ஏற்றிக்கொண்டு விக்னேஷ்வரனுடன் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி சாலையில் சென்றுள்ளனர்.

    சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வேனை நிறுத்திய கவுரிசங்கர். விக்னேஷ்வரனுடன் சேர்ந்து பைக்கையும் லோகநாதனின் உடலையும் அங்கு இருந்த மைல் கல் அருகே போட்டு உள்ளனர்.

    அதன் பின்னர் சத்தியில் உள்ள தனியார் ஆம்புலன்சிற்கு போன்மூலம் கவுரிசங்கர் தகவல் அளித்து உள்ளார்.

    ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தனது நிறுவனத்தில் வேலை செய்து வருபவரின் கணவர் என்றும், அந்த வழியாக வரும் போது விபத்தில் அடிபட்டு கிடப்பதாக கூறி உள்ளனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவரும் அதை நம்பி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லோகநாதன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறவே லோகநாதனின் சடலத்தை சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்.

    இந்நிலையில் லோகநாதனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், விக்னேஷ்வரனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், களத்தில் இறங்கிய போலீசாரின் தொடர் விசாரைணையில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து சடலத்தை சாலையில் வீசியதும், விபத்து போல் செட்டப் செய்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து மகேஸ்வரி. அவரது கள்ளக்காதலன் கவுரிசங்கர், கவுரிசங்கரின் தம்பி விஜய் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரை பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்து லோகநாதனின் சடலத்தை கொண்டு சென்ற வேனையும் பறிமுதல் செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!