Connect with us

    கள்ளக்காதலை கண்டித்ததால், கணவனை கொன்று வாழைக்கு உரமாக வைத்த மனைவி..!

    Wife kills husband

    Tamil News

    கள்ளக்காதலை கண்டித்ததால், கணவனை கொன்று வாழைக்கு உரமாக வைத்த மனைவி..!

    கடலூர் அருகே கள்ளக் காதலை கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்று வாழை தோப்பில் மனைவி புதைத்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Wife kills husband

    கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் கி.அய்யர் என்ற ராஜசேகர்.

    இவர் விவசாயியாக இருக்கிறார். இவருக்கு வயது 47.

    இவர், தனது சகோதரியின் மகள் விஜயலட்சுமியை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவார்.

    இந்நிலையில், அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாத நிலையில், விஜயலஷ்மியின் தம்பி சிவகுமார் விசாரித்துள்ளார்.

    அப்போது ராஜசேகரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்து விட்டதாக கூறி விஜயலஷ்மி அதிர்ச்சியளித்துள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த்துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர்.

    பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது, கணவர் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

    இதனை கணவர் ராஜசேகர் கண்டித்து வந்தார்.

    கடந்த 9 மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினையின் போது, நானும், மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் சடலத்தை புதைத்தோம்.

    தம்பி சிவக்குமார், ராஜசேகர் மாயமானது குறித்து அடிக்கடி கேட்டு வந்த நிலையில் உண்மையை கூறி விட்டேன் என்று அவர் கூறினார்.

    இதையடுத்து, ராஜசேகர் சகோதரர் கி.ராமசாமி என்பவர் அளித்த புகாரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், ராஜசேகர் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உள்ளனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!