Tamil News
கடற்கரையில் கண்ணாமூச்சி விளையாடிய கணவரை தனது காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய மனைவி..!
காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினேதினி. இவர் குருவார்பட்டியைச் சேர்ந்த அந்தோனி ஜெகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால வினோதினியை ஐடி ஊழியரான கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
ஆனால், இவர் தனது காதலனுடன் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது கணவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கணவனுடன் கண்ணை கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடியுள்ளார்.
அதில் திடீரென வந்த காதலனுடன் சேர்ந்து வினோதினி தனது கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வினோதினியையும், அவரது காதனையும் கைது செய்தனர்.
அதனையடுத்த விசாரணையில், இந்தக் கொலை சம்பவம் முன்பே திட்டமிட்ட செயல் என்பது தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
