Viral News
போலி பாலியல் புகாரில் 20 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டு மன வேதனையுடன் திரும்பியவருக்கு அவரின் புது மனைவியால் ஏற்பட்ட துயரம்..!
திருமணமான அடுத்த நாளே கணவனை விட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றிருக்கிறார் இளம்பெண் ஒருவர். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி மெஹ்ரானில் உள்ளது சில்வான் கிராமம்.
இந்த கிராமத்தை சேர்ந்த விஷ்ணு திவாரி என்பவர் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒரு பெண்ணும், அவரின் கணவர், மாமனாரும் பாலியல் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் திவாரி கைதுசெய்யப்பட்டார்.
தான் வயல் வேலையை முடித்து விட்டு வரும்போது விஷ்ணு திவாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், உண்மையில்
நிலப் பிரச்னையில் அந்தப் பெண்ணின் குடும்பம் போலியாக வன்கொடுமை புகார் கொடுத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்த திவாரிக்கு, 2003-ம் ஆண்டு லலித்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
2005-ம் ஆண்டு திவாரி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
ஆனால் மேல் முறையீட்டு மனுவில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை.
இதனால் வழக்கு விசாரிக்கப்படாமல் கிடந்தது. அதன் பிறகு நீண்ட நாள்களுக்குப் பின்னர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்தது.
16 ஆண்டுகளுகளாக நடந்த இவ்வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் திவாரியை நீதிமன்றம் விடுதலை செய்தது.
வன்கொடுமை வழக்கிலிருந்து திவாரி விடுவிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கை வன்கொடுமையை நிரூபிப்பதாக இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கவில்லை என்றும், அவரின் உறவினர்கள்தான் புகார் கொடுத்திருப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு குற்றமற்றவர் எனச் சிறையிலிருந்து வெளியில் வந்த திவாரிக்கு ஊர் மக்கள் பண உதவி செய்துள்ளனர்.
சிறையில் இருந்து வந்தபோது திவாரிக்கு 43 வயதாகியிருந்தது.
போனது போகட்டும் இனி நடப்பவை நல்ல படியாக இருக்கணும் என புதிதாக வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று கருதி திருமணம் செய்ய பெண் தேடினார்.
பக்கத்து ஊரில் அவருக்குப் பெண் கிடைத்தது. இதையடுத்து எளியமுறையில் திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணம் முடிந்த மறுநாளே திவாரிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரின் மனைவி வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் கணவரை விட்டு புரோக்கருடன் சென்றுவிட்டார்
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு திவாரி உள்ளூரில் அந்த பெண் குறித்து விசாரித்திருக்கிறார்.
அப்போதுதான், அந்த பெண் பற்றிய அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.
இதுவரையில், இதேபோன்று நிறைய பேரை அந்த பெண் ஏமாற்றியதாக கிராம மக்கள் கூறியதும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் திவாரி.
திருமணத்தின் போது, தான் கொடுத்த நகைகளையும் எடுத்துக்கொண்டு மனைவி சென்றுவிட்டதாக திவாரி புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
