Tamil News
“என் குழந்தைக்கு அப்பா என் கணவர் இல்ல; வேறொருவர்” – போலீசாரிடம் ஷாக் வாக்குமூலம் அளித்த பெண்..!!
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்துக்கும், ஞானதீபத்திற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஞானதீபம் 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி காணாமல் போனார்.
இது குறித்து கணவர் அந்தோணி முத்து போலீசாரிடம் புகாரளித்தார்.
இந்நிலையில் ஞானதீபம் கிடைத்து விட்டதாக போலீசார் அந்தோணிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு சென்ற அந்தோணி அதிர்ச்சியடைந்தார்.
அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால் ஞானதீபம், தன்னுடன் ஏற்கனவே திருமணமான பிரதீப் என்பவரை அழைத்து வந்து தங்களை சேர்த்து வைக்கும்படி காவல் ஆய்வாளரிடம் முறையிட்டுள்ளார்.
மேலும் அவரது கர்ப்பத்துக்கு பிரதீப் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.
கடைசியில் அந்தோணி, ஞானதீபத்தை பிரதீப்புடன் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பிரதீப்பை மீட்டுத் தருமாறு அவரின் மனைவியான ஐஸ்வர்யா என்பவரும் அதே காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.
ஞானதீபத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தனது கணவன் பிரதீப், தன்னை விட்டு பிரிந்து அவருடன் சென்றதாகவும், அவரை மீட்டு தருமாறும் அவர் கண்ணீருடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையடுத்து போலீசார் பிரதீப், ஞானதீபத்திடம் முறையாக விவகாரத்து பெற்ற பின்னர் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், காவல்துறையிடமும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
