World News
“நீங்க டைவர்ஸ் தரலைனா, நான் டிரெஸ் இல்லாம ரோட்ல நடந்து போவேன்” – மிரட்டிய மனைவி; அதிர்ந்த கணவன்..!!
சவுதி அரேபியாவில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வினோத மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருமண உறவில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள நினைத்த மனைவி தனது கணவரிடம் விவாகரத்து வழங்க வலியுறுத்தி வந்தார்.
மனைவியின் கோரிக்கைக்கு கணவர் சில காலம் செவி சாய்க்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து பொறுமையை இழந்த மனவைி, விவகாரத்து வழங்க மறுத்தால் பிறந்த மேனியுடன் உடலில் சிறு துணி இன்றி வெளியில் சென்று விடுவேன் என கணவரை மிரட்டி இருக்கிறார்.
மனைவியின் மிரட்டலை சற்று எதிர்பாராத கணவர், அதிர்ச்சியில் மனைவிக்கு விவாகரத்து வழங்கிவிட்டார்.
எனினும், மிரட்டி விவாகரத்து வாங்கியதாக கூறி, தான் வழங்கிய விவகாரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவகாரத்தின் போது ஷரியா செய்யப்பட்டதால் இனி எதுவும் செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கியது.
சமீப காலங்களில் சவுதி அரேபியாவில் விவகாரத்து செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
இதுகுறித்து புள்ளிவிவர ஆணையம் வெளியிட்டு இருக்கும் தரவுகளின் படி சவுதி அரேபியாவில் ஒரு மணி நேரத்தில் ஏழு பேர் விவகாரத்து வழங்க கோரி மனு தாக்கல் செய்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் விவாகரத்து செய்வோர் எண்ணிக்கை 60 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி தினமும் குளிப்பது இல்லை என கூறி விவகாத்து பெற்றார்.
தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் மனைவி முறையிட்டதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த பெண் உத்திர பிரதேச மாநிலத்தின் கவர்சி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
விவாகரத்து கேட்ட கணவர் அதே மாநிலத்தின் சண்டௌஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இருவருக்கும் ஒரு வயது குழந்தை உள்ளது.
மனைவி தொடர்ந்து தனது கணவருடன் வாழவே விரும்பினார்.
எனினும், கணவன் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.
மேலும் தனது மனைவி தினமும் குளிப்பதில்லை என குற்றம் சாட்டி தனது விவகாரத்து வழங்க அதிகாரிகளின் உதவியை கணவர் நாடினார்.
குளிக்கும் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தினமும் சண்டை ஏற்பட்டதாகவும் கணவர் பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் தெரிவித்து இருக்கிறார்.
