Connect with us

    மனைவிகள் மாற்றும் குழுவில் பங்கெடுத்துள்ள முக்கிய விஐபிகள்; வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

    Viral News

    மனைவிகள் மாற்றும் குழுவில் பங்கெடுத்துள்ள முக்கிய விஐபிகள்; வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார்.

    இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் அந்த வாலிபர் தனது மனைவியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று, அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார்.

    அதற்கு அந்த பெண் மறுத்ததுடன் கோபத்துடன் வெளியேறி கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்தார்.

    அந்த மனுவில் தனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இருந்தார்.

    இப்படி ஒரு புகாரை பார்த்து போலீஸ் அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர்.

    எனவே, உடனடியாக இதை பற்றி விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    சைபர் கிரைம் போலீசாரும், புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் நம்பர்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    நேற்று முன்தினம் அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த தகவல்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:

    சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருவதாகவும், இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளான்.

    வாரத்தில் 3 நாட்கள் ஏதாவது ஒரு நண்பர் வீட்டில், அந்த குரூப்பில் இருப்பவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி, மது, உணவு விருந்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

    அப்போது, அங்குள்ளவர்கள் தங்களது மனைவிகளை மாற்றி உறவு வைத்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளான்.

    இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஓட்டல், லாட்ஜ் போன்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்பது வழக்கமhக கொண்டிருந்துள்ளனர்.

    இதன் மூலம் லட்சக்கணக்கான பணபுழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தகவலை கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீசார் அவனின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    அதில், சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குரூப்பில் சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும், பணம் படைத்தவர்களே இந்த குழுவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த இந்த தகவல்கள் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அவர்கள் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற குழுக்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். இதில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற வலைத்தளங்களில் 14 குழுக்கள் செயல்பட்டது தெரிய வந்தது.

    இதில் 750 ஜோடிகள் என 1,500 பேர் உறுப்பினராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பல முறை பல்வேறு ஊர்களில் சந்தித்து உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

    இந்த குழுக்களை தொடங்கியவர்கள் யார்? என்பதை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டது.

    அதன் அடிப்படையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஏற்கெனவே கைதான பெண்ணின் கணவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!