Connect with us

    சாப்பிட அழைத்தும் கணவர் வராததால், கோபத்தில் மனைவி செய்த பகீர் செயல்; அலறிப் போன அக்கம் பக்கத்தினர்..!

    Home food

    Tamil News

    சாப்பிட அழைத்தும் கணவர் வராததால், கோபத்தில் மனைவி செய்த பகீர் செயல்; அலறிப் போன அக்கம் பக்கத்தினர்..!

    சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி மேகலா.

    இந்த தம்பதிக்கு பூர்ணிமாதேவி என்ற மகளும், நவீன்ராஜ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில், தேவராஜ் – மேகலா இருவருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று மேகலா தீக்குளிக்க முயற்சி செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    தங்களது வீட்டில் வழக்கம் போல உணவு சமைத்த மேகலா, தனது கணவர் தேவராஜை சாப்பிட அழைத்து இருக்கிறார்.

    Home food

    ஆனால், தேவராஜ் அதனை பொருட்படுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மேகலா, அருகில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து இருக்கிறார்.

    இதனை அடுத்து மேகலா அலறவே அங்கு ஓடிவந்த தேவராஜ் அவரை காப்பாற்ற முயற்சி செய்து இருக்கிறார்.

    இதனால் அவருக்கும் உடலில் தீ காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

    இந்நிலையில், தேவராஜ் – மேகலா ஆகிய இருவரும் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    சாப்பிட கூப்பிட்டு கணவர் வராததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!