Connect with us

    குடித்து விட்டு உல்லாசத்திற்கு அழைத்த கணவன், கோபத்தில் கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி..!

    Husband rasam

    Tamil News

    குடித்து விட்டு உல்லாசத்திற்கு அழைத்த கணவன், கோபத்தில் கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி..!

    குடித்து விட்டு வந்து இரவில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன் மீது சூடான ரசத்தை ஊற்றிய மனைவியின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Husband rasam

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 42.

    இவருக்கு, குப்பம்மாள்(28) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர் செஞ்சி பஸ் நிலையத்தில் பஸ்களில் தின்பண்டங்கள் விற்று வருகிறார்.

    இவர தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு எடுத்து வராமல் குடித்து விட்டு வீட்டில் அட்டகாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நடராஜனை அவருடைய மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    கணவரின் கொடுமை தாங்க முடியாத குப்பம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் நடராஜனை விசாரணைக்கு அழைத்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    மீண்டும் பிரச்சினை செய்தால் காவல் நிலையத்தில் தகவல் கூறும்படி குப்பம்மாளிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால், நடராஜன் மீண்டும் குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் குப்பம்மாள் புகார் தெரிவித்த நிலையில் நடராஜனை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கனவே நடராஜ் இரண்டு முறை தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு நடராஜன் நன்றாக குடித்து விட்டு வநது தனது மனைவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால், ஆத்திரமடைந்த மனைவி குப்பம்மாள் சூடான ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றி உள்ளார்.

    இதில் முகம் வெந்த நிலையில், செஞ்சி காவல் நிலையம் முன்பு வந்து மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடினார்.

    உடனடியாக போலீசார் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நடராஜனை அனுமதித்தனர்.

    ஆனால் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் நடராஜன் அட்டகாசம் செய்தார்.

    இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் செஞ்சி அரசு மருத்துவமனை சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!