Connect with us

    அண்ணி முன்பு ஆடைகளை அவிழ்த்து போட்டு, கொழுந்தன் செய்த பகீர் செயல்; பதிலுக்கு அண்ணி செய்த தரமான சம்பவம்..!

    Woman harass

    Tamil News

    அண்ணி முன்பு ஆடைகளை அவிழ்த்து போட்டு, கொழுந்தன் செய்த பகீர் செயல்; பதிலுக்கு அண்ணி செய்த தரமான சம்பவம்..!

    அண்ணி என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    Woman harass

    சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் கொழுந்தன் சுரேஷ்குமார்.

    ரமணியின் பக்கத்து வீட்டில் சுரேஷ்குமார் வசித்து வருகிறார்.

    சுரேஷ்குமாருக்கு நீண்ட நாட்களாக அண்ணி மீது ஒரு கண். இதனால் அண்ணியை அடைய சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.

    மேலும், சுரேஷ்குமார் அண்ணிக்கு சமீபகாலமாக அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக நித்யா, தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார்.

    நெருங்கிய உறவினர் என்பதால் நித்யாவும் சுரேஷ்குமாரின் ஆபாச செயல்களால் மனவேதனை அடைந்தாலும் அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மதியம் நித்யா வீட்டில் தனியாக இருந்தபோது சுரேஷ்குமார் நிர்வாணமாக நின்றபடி பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

    இதனால் கடும் ஆத்திரமடைந்த நித்யா, தன்னுடைய கணவரிடம் இது குறித்து சொல்லியிருக்கிறார்.

    இதையடுத்து இருவரும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர்.

    அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் மகளிர் போலீசார்.

    விசாரணையில் சுரேஷ்குமார் நித்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உறுதியானது.

    இதனால் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மைத்துனன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!