Connect with us

    வறுமையின் காரணமாக வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடை முதலாளி செய்த வில்லங்கம்; கதறிய பெண்..!

    Woman abused

    Tamil News

    வறுமையின் காரணமாக வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடை முதலாளி செய்த வில்லங்கம்; கதறிய பெண்..!

    Woman abused

    சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் (28), அதேபகுதியில் ஆன்லைன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் இளம்பெண் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

    அந்த இளம் பெண்ணின் கணவருக்கு சரியான வேலை இல்லாததால் குடும்ப பொறுப்பை தனி ஒருவராக கவணித்து வந்துள்ளார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட அருணாச்சலம், குடும்பத்தை தான் பார்த்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார்.

    காலப்போக்கில் அருணாச்சலத்தின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, அவரை விட்டு பிரிய முடிவெடுத்த அந்த இளம் பெண் வேலைக்கு வருவதை நிறுத்தி கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் வேலைக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, அவரை மிரட்டியுள்ளார்.

    இதற்கு அந்த இளம் பெண் வேலைக்கு வர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை அந்த இளம்பெண்ணின் கணவருக்கு அருணாச்சலம் அனுப்பி வைத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணாச்சலத்தை கைது செய்துள்ளனர்.

    மேலும் இதுபோன்று வேறு ஏதும் பெண்களை வீடியோ எடுத்துள்ளாரா? என்றும், அவரது கைப்பேசி மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களை மனிதாபிமானமற்ற ஆண்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தைரியாக செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!