Tamil News
குடும்ப கஷ்டத்தை போக்க வெளிநாடு சென்ற கணவர்; தங்கை கணவனுடன் கும்மாளம் போட்ட மனைவி; கணவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்..!!
மனைவியின் கள்ளக்காதலை கைவிட கூறிய கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மிட்டாபுதூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவரது கணவர் வெங்கடேசன்.
இவர் தென்னாப்பிரிக்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
வேலைக்காக கணவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது தங்கை சரஸ்வதியின் கணவர் குமரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

குமரன்- விஜயலட்சுமி
இந்த தகவல் தென்னாப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி அன்று சொந்த ஊர் திரும்புவதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த வெங்கடேசனை, குமரன் நேரில் சென்று அழைத்து வந்துள்ளார்.
அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மனைவியை பார்க்க சென்ற வெங்கடேசன் அவருடன் கள்ள உறவு தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தலையிட்ட குமரனுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குமரன் இரும்பு கம்பியால் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை மறைப்பதற்காக குமரன் மற்றும் வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி ஆகியோர் சடலத்தில் கல்லை கட்டி மிட்டாபுதூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி உள்ளனர்.
இந்நிலையில் அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கிணற்றுக்குள் மிதந்த சாக்கு மூட்டையை பார்த்துள்ளனர்.
கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் செய்த கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் குமரனும் விஜயலட்சுமியும் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்
