Connect with us

    4 வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்து எரித்த கொடூர காதல் ஜோடி; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!

    Mother burns child leg

    Viral News

    4 வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்து எரித்த கொடூர காதல் ஜோடி; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!

    சேட்டை செய்த 4 வயது குழந்தையின் காலை எரியும் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாயின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Mother burns child leg

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒசத்தியூரைச் சேர்ந்தவர ரெஞ்சிதா,

    இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    இவரது 4 வயது குழந்தையும் இவ்ர்களோடு ஒன்றாக இருந்துள்ளது.

    இந்த நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்துக்கு செல்லாமல் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை அடித்துள்ளார்.

    அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அவர், குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார்.

    மேலும் அவரை மின்சார வயரைப் பயன்படுத்தியும் அடித்துளார்.

    இதில் குழந்தையின் கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், பழங்குடியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதலின் தீவிரத்தால் அவரது கால் பகுதியின் சதை உதிர்ந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

    இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் தாய் ரெஞ்சிதாவையும் அவரின் காதலர் உன்னிகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

    பின்னர் குழந்தையிடம் போலிஸார் பேசியபோது உன்னிகிருஷ்ணன் தன்னை அடிக்கடி தாக்கியதாக அது கூறியுள்ளது.

    இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!