Connect with us

    பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை வெளுத்து வாங்கிய பெண்..!

    Eve teasing

    Tamil News

    பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை வெளுத்து வாங்கிய பெண்..!

    தர்மபுரி பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை, போலீஸார் கைது செய்தனர்.

    Eve teasing

    தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்குக்கு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது.

    அதே போல் பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரகுகணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால் தருமபுரி பேருந்துநிலையம் எப்போது பொது மக்கள் நிரம்பி பரபரப்பாக காணப்படும்.

    பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது.

    இங்குள்ள காவல்துறையினர் திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர்.

    ஆனாலும் காவல்துறையினர் கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வாகன திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது குற்றங்கள் நடப்பது வழக்கம்.

    இந்நிலையில் இன்று புறநகர் பேருந்து நிலையம் திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு பெண் தனது குழந்தைகளுடன் நின்றிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில் அங்கு நின்றிருந்த பெண்ணை தவறான முறையில் தொட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று பெண்களிடம் நடந்துகொள்ளுவாயா என திட்டி முதியவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி உதைத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் அப்பெண்ணின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என ஓடிவிட்டார்.

    பிறகு அப்பெண் அங்கிருந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் செல்லும் பேருந்து வந்த உடன் ஏறி சென்றுவிட்டார்.

    மேலும் அப்பெண்ணின் செயலை அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினர்.

    அப்பெண் முதியவரை அடித்ததை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து சமூக வலைதலங்களில் பரப்பியதால் தற்போது அந்த புகைபடம் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!