Viral News
வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தண்டனையாக அவரது கணவனை தோளில் தூக்கி சுமந்து ஊர் முழுவதும் சுற்ற வைத்த ஊர்மக்கள்..!
வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணை அவரது கணவனை தோளில் சுமந்து ஊர் முழுவதும் சுற்றி வரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்போதைய காலகட்டங்களில் திருமண வாழ்வு என்பது பெரும்பாலானோருக்கு சந்தோஷத்தை அளிப்பதில்லை.
இதற்கு காரணம் திருமண வாழ்வில் இணைந்தவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் தான்.
இதனால், தங்களது துணையை தவிர்த்து விட்டு வேறொரு துணையை நாடிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதனால் சமுதாயத்தில் கள்ளக்காதல் புற்றீசலாக பெருகி வருகிறது.
அவ்வாறு வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு அந்த ஊர்மக்கள் அளித்த தண்டனை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தை சேர்ந்த நபர் மங்கிலால்.
இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மங்கிலால் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, உடைகளை களைந்து மானபங்கம் செய்துள்ளனர்.
பின்னர், அந்த பெண்ணை அவரது கணவர் மங்கிலாலை தோளில் சுமக்க வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்ற வைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.
இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
