Connect with us

  “ஐயா! என் பொண்டாட்டி அடிய தினமும் என்னால தாங்க முடியல; என்னை காப்பாத்துங்க ஐயா” – காவல் நிலையத்தில் கதறிய அப்பாவி கணவர்..!

  Suman who beats husband

  Viral News

  “ஐயா! என் பொண்டாட்டி அடிய தினமும் என்னால தாங்க முடியல; என்னை காப்பாத்துங்க ஐயா” – காவல் நிலையத்தில் கதறிய அப்பாவி கணவர்..!

  Suman who beats husband

  ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ்.

  இவர் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

  அஜித் சிங் ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற அழனான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சில நாட்கள் வாழ்க்கை நன்றாக சென்றது.

  சுமன் மிகவும் அழகாக இருப்பார். ஆனால் நாளுக்கு நாள் அந்த அழகில் ஆபத்து இருப்பது தெரிய ஆரம்பித்தது.

  சுமன் கடுமையான கோவக்காரி. எதற்கெடுத்தாலும் கோவம் கொண்டு எதையாவது எடுத்து அடிக்க தொடங்கி விடுவார்.

  இதனால் பலமுறை அஜித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப்ட்டு வீடு திரும்பி உள்ளார்.

  எப்போது சண்டை வந்தாலும், சுமன் வீட்டு கதவை அந்த பெண் சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டுதான் அடிப்பாரம்.

  சப்பாத்தி கட்டை , கிரிக்கெட் மட்டை கையில் என்ன கிடைக்கிறதோ, அவை அனைத்தும் அஜித்தை அடிக்கும் ஆயுதங்களாக மாறின.

  எதுவும் கிடைக்கவில்லை என்றால் கணவனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதவைப்பது, இல்லாவிட்டால் எட்டி எட்டி உதைப்பது என வீடே ரணகளமாகும்.

  மனைவியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால். அஜித்தால் அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை.

  உடம்பில் அடிவாங்க தெம்பும் இல்லாமல் நேராக போலீசுக்கு சென்றார்.

  சார் என் மனைவி என்னை சித்ரவதை செய்கிறார், என்னால் தினமும் அடிவாங்க முடியவில்லை. என்று குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார்.

  ஆனால் போலீசாரோ, அஜித்குமாரின் புகாரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

  அடி வாங்கி, அடி வாங்கி அஜித் சிங்கின் தற்போதைய நிலை, சில நொடிகளில் அனைத்தையும் மறந்துவிடும் அளவுக்கு மனநோயாளாக்கிவிட்டது.

  சக ஊழியர்களின் பெயரைக் கூட அடிக்கடி மறந்துவிடுகிறார்.

  வீட்டுக்கு சென்றால் மனைவி அடிப்பாளோ என்ற பயத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் வீட்டுக்குச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

  அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு காலத்தைக் கடத்தி வந்துள்ளார்.

  போலீசார் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்தார்.

  கோர்ட்டில் காட்டுவதற்காக ஆதாரங்களை திரட்ட ஆரம்பித்தார்.

  மனைவி தன்னை தாக்குவதுதான் ஒரே முக்கிய ஆதாரம்.

  ஆனால் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அடிப்பதால், வெளியே யாருக்கும் இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்பதால், வீட்டிற்குள்ளேயே மனைவிக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தினார் அஜித்.

  வழக்கம்போல மனைவி தனது சுயரூபத்தை காட்டினார். தலைமை ஆசிரியரும் கிரிக்கெட் மட்டை, பூரி கட்டை, என பல வித ஆயுதங்களால் அடிவாங்கியதை விதவிதமாக சிசிடிவி மூலம் பதிவு செய்தார்.

  அந்த ஆதாரத்தை எடுத்துக் கொணடு கோர்ட்டுக்கு போனார்.

  நீதிபதியிடம் வீடியோவை காட்டினார் அந்த வீடியோ காட்சிகளை பார்க்க, பார்க்க நீதிபதி அரண்டு போய் விட்டார்.

  நீதிமன்றமே அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தது.

  இதுதொடர்பாக தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  இறுதியில், மனைவியால் தாக்குதலுக்குள்ளாகி தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகும் அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

  இந்த சிசிடிவி காட்சிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

  இதுகுறித்து அஜித் சிங் யாதவ் கூறியதாவது:- பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வன்முறையை சகித்துக் கொண்டேன்.

  ஆனால் இப்போது என் மனைவி எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டதால் நான் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன்.

  நான் சுமனை கைநீட்டி அடித்ததில்லை, சட்டத்தை கையில் எடுத்ததில்லை. நான் ஒரு ஆசிரியர்.

  ஒரு பெண் மீது ஆசிரியர் கையை உயர்த்தி சட்டத்தை கையில் எடுத்தால் அது இந்திய கலாச்சாரத்திற்கும், அவரது நிலைப்பாட்டிற்கும் எதிரானது என கூறினார்.

  Continue Reading
  To Top
  error: Content is protected !!