Connect with us

    திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்த ஜோடி; இறுதியில் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம் .!!

    Love pair

    Tamil News

    திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்த ஜோடி; இறுதியில் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம் .!!

    காஞ்சிபுரம் திருப்பெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 ஜோடிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

    Love pair

    திருப்பெரும்புதூரில் தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், இங்கு ஒப்பந்த அடிப்படையில் வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கமாகும்.

    அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் கோபி, ஸ்ரீகாத் சமத் என்ற 2 ஆண்களும், புல்மதி மற்றும் சுகுமதி சுந்தி என்ற 2 பெண்களும் சங்கரிடம் வீடு வாடகைக்கு கேட்டுள்ளனர்.

    அப்போது விஷால் கோபி புல்மதியை திருமணம் செய்து கொண்டதாகவும், ஸ்ரீகாத் சுகுமதியை திருமணம் செய்து கொண்டதாகவும் பொய் கூறி வீட்டில் நால்வரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆண்கள் இருவரும் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் விஷால் கோபியுடன் இணைந்து வாழ்வதற்கு புல்மதிக்கு பிடிக்கவில்லை.

    இதனால் பெற்றோருக்கு போன் செய்த புல்மதி, விஷாலை விட்டு விலகி ஜார்க்கண்டுக்கே வரவிருப்பதாகவும், இதற்காக 1000 ரூபாய் அனுப்புமாறும் கேட்டிருக்கிறார்.

    ஆனால் புல்மதியின் பெற்றோர் இங்கு வரவேண்டாம் என தெரிவித்து பணம் அனுப்பவும் மறுத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த புல்மதி அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையறிந்த சோமங்கலம் போலீசார் புல்மதியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விஷால் கோபி, ஸ்ரீகாத் சமத் மற்றும் சுகுமதி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    உயிரிழந்த புல்மதி தற்கொலைதான் செய்து கொண்டாரா? அல்லது உடன் இருந்தவர்களே கொலை செய்து விட்டு நாடகமாடியிருக்கிறார்களா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!