Connect with us

    “என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் செல்லம்” -கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை..!

    Divya

    Uncategorized

    “என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் செல்லம்” -கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை..!

    தனது எட்டு மாத குழந்தைக்கு வலிப்பு நோய் பாதிப்பால் மனமுடைந்த தாய், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Divya

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் – திவ்யா.

    முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது.

    குழந்தை தர்ஷினி பிறந்ததிலிருந்து வலிப்பு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதனால் குழந்தை தர்ஷினிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.

    பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குழந்தைக்கு உடல்நலம் ஏற்படவில்லை.

    இது திவ்யாவின் மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.

    இதனால் அவர் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திவ்யா குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் தனது கணவருக்கு உருக்கமான‌ கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அதன் பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று தனது மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தைக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார்.

    தற் கொலை செய்வதற்கு முன் தனது கணவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில்,
    என் தாலி கயிற்றை காலம் முழுவதும் உன் இடுப்பில் கட்டிக்கொள் என கணவருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

    வலிப்பு நோய் காரணமாக 8 மாத குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லவராயனேந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் குறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!