Connect with us

    கர்ப்பமான 11-வது மாதத்தில் 11-ம் தேதியில் தனது 11-வது குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்; வியப்பூட்டும் சம்பவம்..!

    Sathu

    World News

    கர்ப்பமான 11-வது மாதத்தில் 11-ம் தேதியில் தனது 11-வது குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்; வியப்பூட்டும் சம்பவம்..!

    ஐரோப்பாவில் இளம் பெண் ஒருவர் கர்ப்பமான 11வது மாதத்தில் 11-ம் தேதியில் அவரது 11-வது குழந்தையை பெற்று எடுத்த சம்பவம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Sathu

    ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங் என்ற பெண்மணி தனது 21-வது வயதில் முதல் முறையாக கர்ப்பமானார்.

    ஆனால் சது நார்ட்லிங்கின் கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது முதல் கர்ப்பம் கலைந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவருக்கு இருந்த அதிகமான மன அழுத்தம் காரணமாக அவரது உடல் கருமுட்டையை வெளியேற்றும் திறனை இழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அவரால் குழந்தைகளே பெற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தையே பிறக்காது என மருத்துவர்களால் கூறப்பட்ட சது நார்ட்லிங், தற்போது தனது 11-வது குழந்தையை அதிசயமான முறையில் பெற்றெடுத்துள்ளார்.

    பெரும்பாலும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்க 10 மாதங்கள் என்பது அனைவரும் அறிந்தது.

    சில சமயம் அது குறைவான மாதத்திலும் நிகழ்வதுண்டு. ஆனால் சது நார்ட்லிங் கர்ப்பமாகி 11-வது மாதத்தில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    ஏற்கனவே 10 குழந்தைகளுக்கு தாயான சது நார்ட்லிங், கர்ப்பமான 11-வது மாதத்தில் 11ம் தேதியில் 11-வது குழந்தையை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

    சது நார்ட்லிங்-க்கு 11-ல் என்ன ராசியோ தெரியவில்லை அவரது 11-வது குழந்தை 11 என்ற இலக்கங்களில் பிறந்துள்ளது. சது நார்ட்லிங்-க்கு 2008ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!