Connect with us

    டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம், கதறிய கணவன்..!

    Yoganayaki

    Tamil News

    டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம், கதறிய கணவன்..!

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு திரும்பிய இளம்பெண் கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Yoganayaki

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா அரவங்குறிச்சியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன்.

    இவரது மனைவி யோகநாயகி (வயது 31).

    இவர் அரசுப் பணியில் சேர்வதற்காக போட்டித் தேர்வுகள் எழுதுவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

    அந்த தேர்வை எழுதுவதற்காக தனது பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தையுடன் சென்றுள்ளார்.

    கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார்.

    தேர்வு முடிந்த பின் பஸ் ஏறுவதற்காக சாலையை கடந்த போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் யோகநாயகி மீது மோதி தடுப்புச்சுவரையும் மோதி நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இறந்துபோன யோகநாயகிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!