Tamil News
ஆசை ஆசையாய் திருமணம் முடிந்து முதலிரவு அறையில் காத்திருந்த மணமகன்; பால் சொம்புடன் உள்ளே வந்து மணமகள் செய்த பகீர் வேலை..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஜோடி ஆப் மூலம் திருமணம் செய்து லாரி டிரைவரை இளம்பெண் ஒருவர் ஏமாற்றி பணம், நகைகளை திருடி சென்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(48).
இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.
இதனால் தனது 12 வயது மகனை பார்த்து கொள்வதற்காக செந்தில் மறுமணம் செய்ய முடிவெடுத்தார்.
பல்வேறு இடங்களில் தேடி மணப்பெண் கிடைக்காததால், ஜோடி ஆப் மூலம் பெண் தேடியுள்ளார்.
இதனிடையே அதே செயலியில் லதா என்னும் பெண், தான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தான் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த வரன் வேண்டும் என பதிவிட்டு இருந்துள்ளார்.
இதனை கண்ட செந்தில் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செந்திலும், கவிதாவும் தினமும் போனில் நெருக்கமாகவே பேசி வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் தனது வீட்டு செலவுக்கு பணம் இல்லை. எனவே பணம் அனுப்புமாறு செந்திலிடம் கவிதா கேட்டுள்ளார்.
செந்திலும் தனது வருங்கால மனைவி தானே என ஆசையில் கவிதாவின் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
பிறகு இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஜுன் 24-ம்தேதி சேலத்தில் ஒரு சிவன் கோவிலில் கவிதாவுக்கு செந்தில் தாலி கட்டி உள்ளார்.
அன்றைய தினமே, புதுமனைவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் செந்தில்.
மேலும் தனது வீட்டில் இருந்த நகைளை அணிவித்து அழகு பாரத்துள்ளார். மேலும் தனது வீட்டு பீரோ சாவியை கொடுத்துள்ளர.
தனது மனைவிக்கு ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.
அன்று இரவில் நடைபெற்ற முதலிரவில் பகல் முழுவதும் சிரித்து சிரித்து பேசிய அவர், இரவு ஆனவுடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.
உடனே கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார்.
கவிதா தனக்கு சோர்வாக இருப்பதாக கூறி படுத்து கொண்டார்.
மறுநாள் காலையில் செந்தில் எழுந்து பார்த்த போது அந்த பெண்ணை காணவில்லை. மேலும் அவரது வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கு போன் செய்து செந்தில் கேட்ட போது, அம்மா நினைவு வந்து விட்டதால் ஊருக்கு வந்து விட்டேன் என்று கூறி என்னை சமாதானம் செய்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த செந்தில், இது குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தலைமறைவான பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் கோயமுத்தூர் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
