Connect with us

    2-வது கணவன், 2-மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாயமான டிக்டாக் இளம்பெண்..!

    Tiktok pair

    Tamil News

    2-வது கணவன், 2-மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாயமான டிக்டாக் இளம்பெண்..!

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன். வயது.22.

    இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுக்கொடுக்கும் மையம் நடத்தி வருகிறார்.

    இவருக்கு பிரகலட்சுமி (வயது.22) என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது.

    Tiktok pair

    பிரகலட்சுமி சென்னையை சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோ மூலம் நிறைய ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

    இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிக்குள் நிறைய தகராறுகள் வந்து போயுள்ளன.

    ஒவ்வொரு முறையும் இவர்களுக்குள் சண்டை வந்தாலும், பிறகு இருவருமே சமாதானம் ஆகி கொள்வார்களாம்.

    அப்படித்தான், சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    சண்டை போட்டுவிட்டு, கோபத்தில் கலையரசன் வெளியே சென்றுவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து கலையரசனுக்கு போனை போட்ட பிரகலட்சுமி, வீட்டை விட்டே போவதாக சொல்லிவிட்டு, போனையும் கட் செய்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசன் உடனே பிரகலட்சுமியை தொடர்பு கொண்டபோது, அவரது போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பிறகு எங்கெங்கோ மனைவியை தேடி அலைந்தார். எங்குமே அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மனைவியை கண்டுபிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் கணவரிடம் கோபித்துக்கு கொண்டு 2 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு மாயமான டிக்டாக் பிரபலம் பிரகலட்சுமியை தேடி வருகிறார்கள்

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!