Connect with us

    ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்; திருமணத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து..!

    Woman fell in love

    Tamil News

    ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்; திருமணத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து..!

    Woman fell in love

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் இளம்பெண் கீர்த்தி.

    இவருக்கும் கருக்கல்வாடியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இந்த நிலையில், கீர்த்தியை காணவில்லை என்று கணவர் மற்றும் பெண்ணின் பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

    அப்போதுதான், இரும்பாலை பகுதியைச் சேர்ந்த தேவ் என்ற இளைஞருடன் ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கீர்த்தி தஞ்சமடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் கீர்த்தி கருக்கல்வாடியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் இரும்பாலையை சேர்ந்த தேவ் ஆகிய இருவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இவர்கள் மூவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், கஜேந்திரன் முறைப்படி பெண் கேட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கீர்த்தியை திருமணம் செய்துள்ளார்.

    மேலும், திருமணத்திற்கு வேண்டிய பட்டு புடவை, நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீர்த்தியை அழைத்து சென்று, கீர்த்தி தேர்வு செய்தவற்றையே வாங்கி கொடுத்துள்ளனர்.

    இந்தநிலையில், கஜேந்திரனை விட்டு, காதலன் தேவுடன் வாழ்வதாக கூறியும், பாதுகாப்பு வழங்குமாறும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், காதல் கணவர் கஜேந்திரனும் வந்து காதல் மனைவி கீர்த்தியுடன் பேசினார்.

    சுமார் மூன்று மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் கீர்த்தி காதல் கணவருடன் செல்ல சம்மதித்தார்.

    ஆனால், காதலன் தேவ், கீர்த்தியை விட்டு செல்லமுடியாது என்று கூறி, பிரச்சனை செய்தார்.

    மேலும், தேவ்வின் உறவினர்கள் காரில் ஏற்றி செல்ல முற்பட்டபோது, காரில் ஏறாமல் கீர்த்தியுடன் சேர்த்து வைக்குமாறு கத்தினார்.

    இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய போலீசார் தேவ்விற்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி, உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!