Connect with us

    கள்ளக்காதலியுடன் ஷாப்பிங் போன கணவனை கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி; வைரல் வீடியோ…!

    Couples fight

    Tamil News

    கள்ளக்காதலியுடன் ஷாப்பிங் போன கணவனை கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி; வைரல் வீடியோ…!

    உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி.

    இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் இவரது மனைவி சண்டை போட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு காசியாபாத்தில் உள்ள சந்தைக்கு ஷாப்பிங் சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது மனைவியும் அவரது தாயாரும் அங்கு வந்துள்ளனர். அப்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மணீஷ்திவாரியின் மனைவி கணவனைப் பிடித்து சரமாரியாக விரட்டி விரட்டி அடுத்துள்ளார்.

    Couples fight

    இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும் கணவர் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணுடன் ஷாப்பிங் வந்த கணவனை மனைவி விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!