Tamil News
சரக்கடித்து விட்டு பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் ரகளை செய்த பெண்; வைரல் வீடியோ வெளியானதால் பரபரப்பு..!
தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது.
காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக குறைக்கப்பட்டது.
ஆனால், இரவு 10 மணி வரை கடை இருக்கும் என்ற பழைய நடைமுறை உள்ளதால் விற்பனையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.
கடை எப்போடா திறப்பார்கள் என்று காலையிலேயே கடை முன்பு காத்திருக்கும் பலர் பிளாக்கில் சரக்கு வாங்கி காலையிலேயே அடித்து விடு கின்றனர்.
இதில், பெண்களும் விதிவிலக்கல்ல என்பதை காட்ட பல இடங்களில் பெண்களும் சரக்கு அடித்து பொது இடங்களில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சரக்கடித்து விட்டு பெண் ஒருவர் தகராறு செய்யும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் தமிழகத்தின் மையப்பகுதியாக திண்டுக்கல் பேருந்து நிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் தினமும் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை, தேனி, கொடைக்கானல் வத்தலகுண்டு ஆகிய பேருந்துகள் நிற்கும் இடத்தின் அருகில் பெண் ஒருவர் சரக்கடித்து விட்டு ஆண் ஒருவரை அடித்து ஆபாசமாக பேசி நடந்துகொண்டுள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ரகளை செய்த பெண் யார்? அவர் அந்த ஆணை ஏன் அடித்தார் என்பதை குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
