Viral News
“மந்திரவாதி ஒருவர் அடிக்கடி கனவில் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்; அவர் மீது நடவடிக்கை எடுங்க” – போலீசில் கதறிய இளம்பெண்…!!
உலகில் தினம் தினம் எங்கோ ஓர் மூலையில் சில விசித்திரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சமுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் நமக்குள் அவை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பீஹாரில் ஒரு பெண்ணின் கனவில் தோன்றி தினமும் பாலியல் பலாத்காரம் செய்ததாக, மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், உடல் நலிவுற்ற தன் மகனை குணப்படுத்த ஒரு மந்திரவாதியிடம் சென்றார்.
அவர் சில சடங்குகளை கூறி மந்திரங்களை உச்சரிக்கும்படி சொல்லி அனுப்பியுள்ளார்.
அதன்படி அந்த பெண், மந்திரம் சொல்லத் துவங்கிய 15வது நாளில் மகன் இறந்து விட்டார்.
அதன்பின் அந்த மந்திரவாதி, தினமும் தன் கனவில் தோன்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவுரங்காபாத் காவல் துறை துணை கண்காணிப்பாளர் லலித் நாராயண் கூறியதாவது:
அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
ஆனால், கனவில் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான ஆதாரங்களை அந்த பெண் தரவில்லை.
அதனால், மந்திரவாதியை விடுவித்து விட்டோம்.
அந்த பெண்ணை மனநோய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி உறவினர்களிடம் தெரிவித்துள்ளோம் என கூறினார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
