Tamil News
குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வீட்டு உரிமையாளர்; கதறி அழுத பெண்..!
வீட்டு உரிமையாளர் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அபிநயா(26). இவர் பரமக்குடியில் ரூ.2 லட்சம் போக்கியதுக்கு வீடு எடுத்து கடந்த ஓராண்டாக தங்கி வந்துள்ளார்.
போக்கியத்திற்கு கொடுத்த பணத்திற்கு வீட்டு உரிமையாளர் எந்த ஆவணமும் எழுதி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடனாக வீட்டு உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.
இந்த கடனுக்காக மட்டும் வெற்று புரோ நோட்டில் அவரது மனைவி கையெழுத்திட்டுள்ளார்.
இதனையடுத்து, 10 வட்டிக்கு ரூ.3 லட்சம் ரூபாய் கடனாக வீட்டு உரிமையாளரிடம் பெற்றுள்ளார்.
கடனை திருப்பிக்கேட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்த உரிமையாளர் தொல்லை கொடுத்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப்பெண் குளிப்பதை மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்து வீட்டு உரிமையாளர் அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
நாளுக்கு நாள் அவரின் அத்துமீறல்கள் எல்லை மீறியது.
மேலும் அந்த வீடியோவை வெளிநாட்டில் வேலை பார்க்கும் உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி பணம் நகைகளை பறித்து வந்துள்ளார்.
இதுவரை ரூ.16.90 லட்சம் பறித்துவிட்டதாகவும் வீட்டை காலி செய்ய விடாமலும், ரூ.15 லட்சம் பொருட்களை எடுக்க விடாமலும் அடியாட்களை வைத்து தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாலியல் தொல்லை தரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பெண் ராமநாதபுரம் எஸ்.பி மற்றும் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் அப்பகுதியில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
