Connect with us

    கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மனைவி..!

    Husband naked parade

    Viral News

    கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மனைவி..!

    கள்ளக்காதலியுடன் தனிமையில் உல்லாசம் இருந்த கணவரை அடித்து துவைத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற மனைவியின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Husband naked parade

    ஒவ்வொரு நாளும் நாளேடுகளை திருப்பினால் கள்ளக்காதல் சம்பந்தமான செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது.

    அந்த அளவிற்கு நம் சமூகத்தில் கள்ளக்காதல் புரையோடி போய் இருக்கிறது.

    மாறிவரும் கலாச்சாரம், ஒழுக்கமின்மையே இதற்கு மூல காரணமாக சொல்லப்படுகிறது.

    மாமியார், மருமகனுடன் கள்ளக்காதல், மைத்துனன் அண்ணியுடன் கள்ளக்காதல், மாமா மச்சான் மனைவியுடன் கள்ளக் காதல் என அநியாயங்கள் அரங்கேறி வருகின்றன.

    அந்த வகையில் சத்தீஸ்கரில் கணவரையும், அவரது காதலியையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில், ஃபர்சகான் என்ற பகுதியில் பட்காய் என்ற பழங்குடி கிராமம் உள்ளது.

    இங்குள்ள ஒரு திருமணமான நபருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    இவர்களின் கள்ளக்காதல் அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

    கடந்த 11ம் தேதியன்று, அந்த ஜோடி தனிமையில் இருந்துள்ளது.

    இதனை அந்த நபரின் மனைவி நேரில் பார்த்து கொந்தளித்து போய்விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரின் மனைவி அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து கிராம சபை முன் நிறுத்தியுள்ளார்.

    அதில், இருவரையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்துவது என, முடிவானது.

    இதையடுத்து கணவரையும், அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!