Connect with us

    திருமணம் ஆன வாலிபருடன் காதல் கொண்டு, அவருடன் விடுதியில் தங்கி இளம்பெண் செய்த பகீர் காரியம்; அதிர்ச்சியில் உறவினர்கள்..!

    Gayathri with her boy friend

    Uncategorized

    திருமணம் ஆன வாலிபருடன் காதல் கொண்டு, அவருடன் விடுதியில் தங்கி இளம்பெண் செய்த பகீர் காரியம்; அதிர்ச்சியில் உறவினர்கள்..!

    கேரள மாநிலம் கொல்லம் பரவூரை சேர்ந்தவர் 32 வயதான பிரவீன். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    அதே கடையில் 23 வயதான காயத்ரி என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

    ஒரே கடையில் வேலை பார்த்து வந்ததால் பிரவீன், காயத்ரியுடன் நட்பாக அடிக்கடி பேசியுள்ளார்.

    Gayathri with her boy friend

    இவர்களின் நட்பு நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியுள்ளது.

    இந்த விவகாரம் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர் கணவர் வேலை செய்யும் கடைக்கு வந்து புகார் அளித்ததோடு, காயத்ரியின் வீட்டிலும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

    காயத்ரியின் பெற்றோர்கள் காயத்ரியை அந்த கடையில் இருந்து விலகி வேறொரு நகைக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டனர்.

    அதேபோல், பிரவீனும் திருவனந்தபுரத்தில் இருந்து வீட்டை காலி செய்து நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பிரவீன் காலை 10 மணிக்கு தம்பானூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

    சிறிது நேரத்தில் காயத்ரியும் அங்கு வந்துள்ளார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் பிரவீன் மட்டும் தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

    அதன்பிறகு அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் தங்கும் விடுதிக்கு பிரவீன் போன் செய்து, தன்னைடைய அறையில் காயத்ரி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

    இதைகேட்டு லாட்ஜில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு காயத்ரி இறந்து கிடந்துள்ளார்.

    போலீசார் காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தலைமறைவான பிரவீனை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று பிரவீன் பரவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நானும், காயத்ரியும் பேசிக் கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரத்தில் தலையணையால் காயத்ரி முகத்தில் அமுக்கி கொலை செய்ததாக பிரவீன் கூறியுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!