Connect with us

    ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த அதிசய பெண்மணி; குவியும் வாழ்த்துக்கள்…!

    4 children

    Viral News

    ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த அதிசய பெண்மணி; குவியும் வாழ்த்துக்கள்…!

    தினம் தினம் உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அறிவியலையும் மிஞ்சிய சில அதிசய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

    அவை பற்றிய செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலா வருவதுண்டு

    அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    4 children

    கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம், பத்ராவதி தாலுகா, கடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப், 30. இவரது மனைவி அல்மா பானு, வயது 27.

    இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

    நிறைமாத கர்ப்பிணியான அல்மா பானு, பிரசவத்துக்காக ஷிவமொகாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.

    இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    குடும்பத்தினர் மட்டுமின்றி, மருத்துவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!