World News
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி..!!
கடவுளால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் அவ்வப்போது சில வியக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறுவது உண்டு.
நமது கற்பனைக்கும் எட்டாத வகையில் இவ்வாறு நடைபெறும் இவ்வகையான நிகழ்வுகள் விஞ்ஞான ரீதியாக பலரை ஆச்சரியப்பட வைக்கும்.
அந்த வகையில் இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் அடங்கும்.
இலங்கை அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு ஆப்ரேசன் மூலம் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பிலுள்ள ‘நைன்வெல்ஸ்’ (Ninewells) எனும் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவைக் கடந்த வேலையில் இரவு 12.16- 12.18க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த 6 குழந்தைகள் பிறந்துள்ளது.
இவற்றில் எடை கூடிய குழந்தை 1.6 கிலோகிராம் கொண்டது என்றும், எடை குறைந்த குழந்தை 870 கிராமுடனும் இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.
பேராசிரியர் டொக்டர் டிரான் டயஸ் தலைமையில் இந்த ஆபரேசன் நடைபெற்றது என்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட செயற்பாட்டு முகாமையாளர் குறிப்பிட்டார்.
தாயும், குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
