Connect with us

    ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; குவியும் பாராட்டுக்கள்…!!

    Woman gave birth triplet boys in England

    World News

    ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; குவியும் பாராட்டுக்கள்…!!

    இங்கிலாந்தில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Woman gave birth triplet boys in England

    இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் வசிப்பவர்கள் கிரேக் – ஜினா டியூட்னி தம்பதி.

    கடந்த ஆண்டு ஜினா கர்ப்பமாக இருந்த போது அவரை லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிரேக்.

    அப்போது ஜினாவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

    அவர்களின் ஆச்சர்யத்திற்கு காரணம், ஜினா மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க இருக்கிறார் என்பதே.

    பொதுவாக ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறப்பது வழக்கம் தான் என்றாலும், கிரேக் – ஜினா தம்பதிக்கு ஒரே மாதிரியான 3 ஆண் குழந்தைகள் (identical triplet boys) பிறந்திருக்கின்றன.

    இது 200 மில்லியன் தம்பதிகளில் ஒருவருக்கு தான் நிகழும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    குழந்தைகள் பிறந்த உடன் சிறப்பு மருத்துவ அறையில் 6 வாரங்களுக்கு மூன்று குழந்தைகளும் வைக்கப்பட்டு உள்ளனர்.

    மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட தருணத்தை நினைவுகூர்ந்த ஜினா,” இரட்டையர் என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

    அப்போது திரையில் மூன்றாவதாக ஒரு பகுதி தெரிந்தது. எனது கணவர் அது என்ன? மூன்றாவது தலையா? என ஆச்சர்யத்துடன் கேட்டார்.

    ஸ்கேன் செய்த நபர், என்னுடைய 25 வருட அனுபவத்தில் 3 குழந்தைகளை பார்த்ததில்லை.

    ஆம் உங்களது வயிற்றில் டிரிப்லேட்ஸ் இருக்கிறார்கள் என்றார். நாங்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்” என்றார்.

    சமீபத்தில், தனது மூன்று மகன்களான ஜிம்மி, ஜென்சன் மற்றும் ஜாக்சன் ஆகியோரின் முதல் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

    இதுகுறித்து கிரேக் பேசுகையில்,” மூன்று பேருக்கும் உணவு ஊட்டுவது சவாலான காரியம். எனது மனைவி ஆரம்பத்தில் மிகுந்த கஷ்டப்பட்டார்.

    ஆனால், இப்போது எங்களுக்கு பழகிவிட்டது. சொல்லப்போனால் எங்களுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

    அவர்கள் தங்களது சிறிய வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குள் தங்களுக்கே உரித்தான மழலை மொழியில் பேசிக்கொள்கிறார்கள்” என்றார் மகிழ்ச்சியாக.

    இந்த தம்பதி Cheshire Triplets என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றினை துவங்கி உள்ளனர். இந்த பக்கத்தை 20,000 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!